Home One Line P2 தந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது!

தந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது!

843
0
SHARE
Ad

சென்னை: செங்கல்பட்டு களியப்பேட்டை எனும் கிராமத்தில் தந்தை பெரியாரின் சிலை உடைந்த நிலையில் காணப்பட்டது.

சிலையின் வலது கை மற்றும் முகம் அடித்து உடைக்கப்பட்டதைக் கண்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து விசாரிக்க காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் பெரியாரைப் பற்றி சர்ச்சையாக கருத்துரைத்ததை அடுத்து திராவிட இயக்கங்களிடமிருந்து பெரும் அளவிலான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

1971-ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய சேலம் பேரணியில் கடவுள் ராம் மற்றும் சீதாவின் புகைப்படங்கள் மற்றும் சிலைகள் ஆடைகளற்ற நிலையில் ஏந்தி வரப்பட்டதாக ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

சோ இராமசாமியின் துக்ளக் பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருந்த போது இந்த கருத்துக்களை தெரிவித்தார்.