Home One Line P1 “இனம் மற்றும் மத தீவிரவாதிகளை மலேசியர்கள் நிராகரிக்க வேண்டும்!”- சுல்தான் நஸ்ரின்

“இனம் மற்றும் மத தீவிரவாதிகளை மலேசியர்கள் நிராகரிக்க வேண்டும்!”- சுல்தான் நஸ்ரின்

815
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

ஈப்போ: மலேசியர்கள் இனம் மற்றும் மத தீவிரவாதிகளை நிராகரிக்க வேண்டும் என்று பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திரம் பெற்ற 62 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒன்றிணைக்கும் குரலும், மக்களை உள்ளடக்கிய மிதமான குரலும், ஆழமற்ற குறுகிய கால அரசியலின் நோக்கங்களுக்காக யாராலும் கைப்பற்ற விட்டுவிடக் கூடாது. மக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலம் இனம் மற்றும் மத தீவிரவாத சித்தாந்தங்களைக் கொண்டுவரும் குழுக்களிடம் ஒப்படைக்கக் கூடாதுஎன்று சுல்தான் ஆணையிட்டதாக சினார் ஹாரியான் நாளிதழ் தெரிவித்ததாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.

இளைஞர்களின் முன்னிலையில் உரையாற்றிய சுல்தான், இளைஞர்கள் ஒற்றுமையை மதிக்க வேண்டும் என்றும் மற்ற இனங்களின் இருப்பை மதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் பிறரின் உணர்வுகளை புண்படுத்தும் கருத்துகளையும், எந்தவொரு இனத்தின் உரிமைகளையும் மறுக்க வேண்டாம் என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

கூட்டாட்சி அரசியலமைப்பு எழுதப்பட்டபோது ஒப்புக் கொள்ளப்பட்ட எந்தவொரு அடிப்படை விஷயங்களுக்கும் இடையூறு விளைவிக்கக் கூடாது என்று சுல்தான் சுட்டிக் காட்டினார்.

அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது தீவிரமானது, ஏனென்றால் மக்களும் நாடும் அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டவர்களை சார்ந்துள்ளது. மதிப்பீடு என்பது பகுத்தறிவு மற்றும் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும், உணர்வு மற்றும் உணர்ச்சியின் அடிப்படையில் அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.