Home One Line P1 துன் ராஹாவுக்கு மலாய் ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை!

துன் ராஹாவுக்கு மலாய் ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை!

550
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, துன் ஹாஜா ராஹாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். சுல்தான் ஷராபுடின், துவாங்கு பெர்மாய்சுரி சிலாங்கூர், தெங்கு பெர்மாய்சுரி நோராஷிகின் ஆகியோர் காலை 9.17 மணிக்கு கெரிஞ்சி, மஸ்ஜித் அர்-ரஹாவில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

சுல்தான் நஸ்ரின் ஷா மற்றும் ராஜா பெர்மாய்சுரி பேராக், துவாங்கு ஜாரா சலீம் காலை 9.50 மணிக்கு வந்தடைந்தனர்.

இதனிடையே, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் அவரது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி ஆகியோர் துன் ராஹாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

#TamilSchoolmychoice

அவருடன் முக்ரிஸ் மகாதீர் உள்ளிட்ட பிற குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர்.

ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள், இயோ பீ யின், தெரசா கோக் மற்றும் யோங் சைபுரா ஓத்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மறைந்த துன் ராஹாவின் உடலை ஏற்றி வந்த வாகனம் ஜாலான் ஈட்டனில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி, இன்று காலை 7.50 மணிக்கு 10 வாகனங்களுடன் அர்-ரஹா மசூதிக்கு வந்து சேர்ந்தது.

இன்று காலை 7 மணி முதல் மசூதியின் நுழைவாயிலில் மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்ப மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுவர்.

துன் ராஹா, 87, நேற்று பிற்பகல் பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.