வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 நடைபெற்று முடிவுற்ற நிலையில், அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். ஆயினும், தனது தோல்வியை இன்னும் ஒப்புக்கொள்ள டிரம்ப் மறுத்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முடியாது என டொனால்டு டிரம்ப் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது
நீண்ட குழப்பங்கள், வழக்குகளுக்கு பிறகு ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார். அடுத்த மாதம் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது.
பதவியேற்பு விழாவன்று வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முடியாது என டொனால்டு டிரம்ப் தனது நெருக்கமான வட்டாரத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் இதேபோல தொடர்ந்து எதார்த்தத்திற்கு எதிராக செயல்பட்டால், அமெரிக்காவில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும். அவருக்கு பாதுகாப்பளித்து வந்த பாதுகாப்பு அதிகாரிகளை அவரை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றும் சூழல் ஏற்படலாம்.