Home One Line P1 பேராக்: மேலும் 5 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்

பேராக்: மேலும் 5 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்

564
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் மாநில அரசாங்கத்தில் இன்று மாலை இரண்டு பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். பாஸ் கட்சி, முன்னதாக புதிய நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருக்காது என்று அறிவித்திருந்தது.

குனுங் செமங்கோல் சட்டமன்ற உறுப்பினரான பேராக் பாஸ் தலைவர் ரஸ்மான் சகாரியா மற்றும் செலாமா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அக்மல் கமருடின் ஆகியோர் இங்குள்ள இஸ்தானா கிந்தாவில் சுல்தான் நஸ்ரின் ஷா முன்னிலையில் பதவியேற்றனர்.

அம்னோவைச் சேர்ந்த சாங்கட் ஜெரிங் சட்டமன்ற உறுப்பினர் அகமட் சைடி முகமட் டாவுட் மற்றும் பெர்சாத்துவின் இரண்டு பிரதிநிதிகள், நோலி ஆஷிலின் முகமட் ராட்ஸி (துவாலாங் சேகா) மற்றும் அப்துல் யூனுஸ் ஜம்ஹாரி (கோலா குராவ்) ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டனர்.