Home One Line P1 ஜோ பைடனுக்கு, புதின் வாழ்த்து!

ஜோ பைடனுக்கு, புதின் வாழ்த்து!

779
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் பதவியை அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கும் மாநில வாரியாக தேர்தல் வாக்கெடுப்பில் பைடன் வெற்றி பெற்ற பின்னர் புதின் தமது வாழ்த்தினைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நவம்பர் 3 வாக்கெடுப்புக்குப் பின்னர் பைடன் வெற்றி பெற்றதை மற்ற நாடுகள் வாழ்த்தியபோதும், அதன் முடிவு குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளுக்காக காத்திருப்பதாக புதின் கூறியிருந்தார்.

“எனது பங்கிற்கு, நான் உங்களுடன் தொடர்பு கொள்ளவும் , பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன்” என்று கிரெம்ளின் ஓர் அறிக்கையில் புதினை மேற்கோளிட்டு கூறியது.

“உலகளாவிய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு ஒரு சிறப்புப் பொறுப்பைக் கொண்ட ரஷ்யாவும், அமெரிக்காவும், வேறுபாடுகள் இருந்தபோதிலும், உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளையும், சவால்களையும் தீர்க்க உண்மையில் உதவ முடியும் என்று நம்பிக்கையை புதின் தெரிவித்தார்,” என்று அது கூறியது.