கோலாலம்பூர்: 2021 வரவு செலவுத் திட்டம் மக்களவையில் இறுதி கட்டத்தில் நிறைவேற்றியுள்ளது.
எண்ணிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதை அடுத்து, ஆளும் கட்சிக்கு 111 வாக்குகளும், எதிர்க்கட்சிகள் 108 வாக்குகளும் பெற்றனர். ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நாடாளுமன்ற ஊருப்பினர் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹாம்சா என்று நம்பப்படுகிறது.
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (கிரிக், பத்து சாபி) இறந்ததைத் தொடர்ந்து மக்களவையில் தற்போது 220 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
2021 வரவு செலவுத் திட்டத்தின் இன்றைய யன்றாவது விவாதத்தில் பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை வாக்டெடுப்பை நடத்த அழைப்பு விடுத்தனர்.
இதுவரையிலும், அனைத்து 27 அமைச்சகங்களுக்குமான ஒதுக்கீடுகள் குழு அளவிலான கட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிதி அமைச்சகம் மற்றும் பிரதமர் துறை உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட அமைச்சகங்களுக்கான ஒதுக்கீட்டில் எதிர்க்கட்சி எண்ணிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரியது. ஆனால், போதுமான வாக்குகளை அது பெறத் தவறிவிட்டது.
டிசம்பர் 2- ம் தேதி அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 1.2 பில்லியன் ஒதுக்கீடு குறித்த விவாதத்தைத் தொடர்ந்து, 110 வாக்குகளுக்கு எதிராக 104 பேர் வாக்களித்தனர்.