Home One Line P2 அமெரிக்காவில் இந்த வாரத்திற்குள் 30 இலட்சம் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படும்

அமெரிக்காவில் இந்த வாரத்திற்குள் 30 இலட்சம் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படும்

582
0
SHARE
Ad

வாஷிங்டன்: உலக அளவில் கொவிட்-19 தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் நேற்று திங்கட்கிழமை பொதுமக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

சுகாதாரப் பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு முதலில் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டன. இந்த வார இறுதிக்குள் 30 இலட்சம் தடுப்பு மருந்துகள் அனைத்து நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என கொவிட்-19 தடுப்பு மருந்து விநியோக திட்டங்களை கவனிக்கும் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை வீசும் நிலையில், நாள்தோறும் பாதிப்படைவோரின் எண்ணிக்கை 2 இலட்சமாக அதிகரித்து வருகிறது. அங்கு 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் மரணமுற்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

முன்னதாக, அமெரிக்காவில் முதல் தடுப்பு மருந்து 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.