Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையின் மறுசீரமைப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கும்!

நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையின் மறுசீரமைப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கும்!

724
0
SHARE
Ad
துன் மகாதீர் அமைச்சரவையின் குழுப்படம்

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையின் முதல் மறுசீரமைப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்றும், மேலும் ஒரு சில அமைச்சர்கள் தங்கள் இலாகாக்களை மாற்றிக் கொள்வார்கள் எனவும் கூறப்படுவதாக டி ஸ்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதுள்ள அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றப்போவதாகவும், மறுசீரமைப்பு உடனடியாக நடத்தப்படும் என்று பிரதமர் அமைச்சரவைக் கூட்டத்தில்

#TamilSchoolmychoice

வெளிப்படையாகக் கூறியது இதுவே முதல் முறையாகும் என்றும் அந்த வட்டாரம் மேலும் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், மற்றொரு ஆதாரம் கூறுகையில், டாக்டர் மகாதீர் தாம் இலாகாக்களை மறுசீரமைப்பதாக மட்டும் கூறியதாகக் குறிப்பிட்டது.

அமைச்சர்களின் வரிசையில் எந்த மாற்றங்களும் இருக்காது என்று அந்த வட்டாரம் நம்புவதாகக் கூறியது.

அதே அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகள்தான், ஆனால் அமைச்சுகளின் இலாகாக்கள் மறுசீரமைக்கப்படும். பிரதமரின் அர்த்தம் இதுதான் என்று நான் நினைக்கிறேன்,” என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டாவது ஆதாரம் கூறியதாக ஸ்டார் தெரிவித்தது.

நேற்று மாலை, டாக்டர் மகாதீர் மூன்று நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களையும், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயிலையும் சந்தித்தார்.