Home One Line P1 இந்தோனிசிய பணிப்பெண் பாலியல் பலாத்காரம் – யோங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

இந்தோனிசிய பணிப்பெண் பாலியல் பலாத்காரம் – யோங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

770
0
SHARE
Ad

ஈப்போ: கடந்த மாதம் இந்தோனிசிய பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் செய்யப்பட்ட பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பவுல் யோங் மீது நாளை வெள்ளிக்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்று மலாய் மெயில் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வதந்திகளை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ சம்பந்தப்பட்ட வட்டாரம் கூற மறுத்ததாகவும், ஆனால், நாளை நீதிமன்றத்தில் ஊடகவியலாளர்கள் காத்திருக்கலாம் என்று கூறியதாக அது குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

பேராக் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமை உதவி ஆணையர் அனுவார் ஓத்மான், அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து விசாரணைக் கடிதத்தை பெற்றதாக உறுதிப்படுத்தினார்.

பேராக் மாநில வீட்டுவசதி, உள்ளூர் அரசு, பொது போக்குவரத்து, இஸ்லாமிய அல்லாத விவகாரங்கள் மற்றும் புதிய கிராமங்களுக்கு பொறுப்பான யோங், 23 வயதான இந்தோனிசியப் பணிப்பெண்ணை மேருவில் உள்ள தனது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.