Home நாடு பாலாவின் மனைவியிடமிருந்து தகவல் கிடைத்தது – அமெரிக் சிடு

பாலாவின் மனைவியிடமிருந்து தகவல் கிடைத்தது – அமெரிக் சிடு

748
0
SHARE
Ad

0685e8334ab84393689383dc6f5e19b8கோலாலம்பூர், ஏபரல் 5 – தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவி தன்னைத் தொடர்பு கொண்டு பேசினார் என்ற தகவலை பாலாவின் வழக்கறிஞரான அமெரிக் சிடு நேற்று வெளியிட்டார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பாலாவின் மனைவியான செந்தமிழ் செல்வி மற்றும் அவரது குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்திருந்த அமெரிக் சிடு, பாலாவின் சத்தியப் பிரமாணங்கள் தொடர்பாக யாராவது அவரை கட்டாயப்படுத்துகிறார்களா என்ற தனது பயத்தையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று செல்வி தன்னைத் தொடர்பு கொண்டு, பாலாவின் 16 ஆம் நாள்  பிரார்த்தனைக்குப் பிறகு தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், எனவே இப்பிரச்சனைகளிலிருந்து சில காலம் விலகியிருந்து, தான் மன அமைதியைத் தேடிக்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார் என்று அமெரிக் சிடு கூறினார்.

#TamilSchoolmychoice