கோலாலம்பூர் – மலேசியாவில் பல முன்னணி அனைத்துலக நிறுவனங்கள் வணிக ரீதியாகச் செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும், சில நிறுவனங்களில்தான் தொழிலாளர்கள் வேலை செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.
அவ்வாறு மலேசியர்கள் பணி செய்ய விரும்பும் முதல் 10 நிறுவனங்கள் யாவை என்பதை ஓர் ஆய்வின் மூலம் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
அதில் முதலிடம் வகிப்பது மலேசியாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ். அடுத்த இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதும் ஒரு பெட்ரோலிய நிறுவனம்தான் – ஆனால் வெளிநாட்டு நிறுவனம். ஷெல் மலேசியா நிறுவனம்தான் அது!
அந்த 10 நிறுவனங்களின் பட்டியல் இதோ:
- பெட்ரோனாஸ்
- ஷெல் மலேசியா
- நெஸ்லே மலேசியா பெர்ஹாட்
- இன்டெல் டெக்னோலோஜி சென்டிரியான் பெர்ஹாட்
- சம்சுங் மலேசியா எலெக்ட்ரோனிக்ஸ்
- ஏர் ஆசியா பெர்ஹாட்
- ஐபிஎம் மலேசியா சென்டிரியான் பெர்ஹாட்
- வாவே டெக்னோலோஜிஸ் சென்டிரியான் பெர்ஹாட்
- சைம் டார்பி பெர்ஹாட்
- சோனி மலேசியா
மலேசியாவில் இயங்கும், அதிகமான தொழிலாளர் எண்ணிக்கையைக் கொண்ட 75 நிறுவனங்களை ஆய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.