அனைத்து மலேசிய சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களும் (SMEs) ஆஸ்ட்ரோ வணிக உரையான ‘Reignite SMEs’ போட்டியின் வழி ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் விளம்பர நேரங்களை (airtime) வெல்ல ஓர் அரிய வாய்ப்பு இதன் மூலம் அமைந்திருக்கிறது.
இந்தப் போட்டியின் வழி பதினைந்து சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் (SME) தங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்காக மொத்தம் RM1,500,000 மதிப்புள்ள தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் விளம்பர நேரங்களை (airtime) வெல்ல முடியும்.
போட்டியாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் விவரங்களை இணையப் படிவத்தில் பூர்த்தி செய்வதோடு கொடுக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். அனைத்து சமர்ப்பிப்புகளும் 2020 ஜூன் 8 முதல் 2020 ஜூலை 5 வரை அனுப்பப்பட வேண்டும்.
ஆஸ்ட்ரோ வணிக உரையான ‘Reignite SMEs’ போட்டியின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உட்பட சமர்ப்பிப்பின் தரம் மற்றும் அசல் தன்மை ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் தகுதியின் அடிப்படையில் பதினைந்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
2020 ஆகஸ்ட் 8 முதல் 2020 ஆகஸ்ட் 22 வரை, போட்டியாளர்கள் தொலைக்காட்சி அல்லது ஆஸ்ட்ரோ கோ வாயிலாக அலைவரிசை Astro AEC-இல் (எச்டி அலைவரிசை 306 மற்றும் அலைவரிசை 346) இரவு 8 மணிக்கு இடம்பெறும் ‘Prime Talk’ நிகழ்ச்சியைக் காண்பதோடு அதில் அறிவிக்கப்படும் தினசரி கடவுச்சொல்லையும் அறிந்திருக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு, இரவு 10.30 மணிக்கு இடம்பெறும் ‘Evening Edition’ நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு அறிவிக்கப்படுவர்.
இடம்பெறும் ‘Evening Edition’ நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் தொடர்பு கொள்ளப்படுப்போது ‘Prime Talk’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்ட தினசரி கடவுச்சொல்லை சரியாக கூறியவர் வெற்றியாளராவதோடு அவர்கள் பரிந்துரைத்த சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் விளம்பர நேரங்களை (airtime) உள்ளடக்கிய முழு தொகுப்பையும் வெல்வர். கடவுச்சொல்லைக் குறிப்பிட முடியாத வெற்றியாளர்கள் தங்கள் பரிந்துரைக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான வானொலி மற்றும் டிஜிட்டல் விளம்பர நேரங்களை (airtime) மட்டுமே வெல்வார்கள்.
ஆஸ்ட்ரோ வணிக உரையான ‘Reignite SMEs’ போட்டியைப் பற்றிய மேல் விபரங்களுக்கு www.astrobusinesstalk.com எனும் அகப்பக்கத்தை அல்லது Astro AEC Facebook page எனும் சமூக வலைத்தளத்தை வலம் வரவும்.