Home One Line P1 ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் சிறந்த 200 நிறுவனங்களில் 6 மலேசிய நிறுவனங்கள்

ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் சிறந்த 200 நிறுவனங்களில் 6 மலேசிய நிறுவனங்கள்

776
0
SHARE
Ad
ஆசிய பசிபிக் வட்டாரத்தின் சிறந்த 200 நிறுவனங்களில் ஒன்றான பப்ளிக் பேங்க்

கோலாலம்பூர் – ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் இயங்கும் சிறந்த 200 நிறுவனங்களை போர்ப்ஸ் வணிக ஊடகம் பட்டியலிட்டுள்ளது. 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கூடுதலான வருமானத்தைக் கொண்ட நிறுவனங்களைக் கொண்ட இந்தப் பட்டியலில் 6 மலேசிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

3,200 அனைத்துலக நிறுவனங்களை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது என போர்ப்ஸ் தெரிவித்தது.

அந்த 6 மலேசிய நிறுவனங்கள் பின்வருமாறு:

  1. பத்து கவான் பெர்ஹாட்
  2. ஹப் செங் கொன்சொலிடேடட்
  3. ஐஎச்எச் ஹெல்த்கேர் பெர்ஹாட்
  4. கோலாலம்பூர் கெப்போங் பெர்ஹாட்
  5. பிரஸ் மெட்டல் அலுமினியம் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்
  6. பப்ளிக் பேங்க் பெர்ஹாட்