Home One Line P1 ஒருதலைப்பட்சமான மத மாற்றம்: அமிருடின் நம்பிக்கைக் கூட்டணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும்!

ஒருதலைப்பட்சமான மத மாற்றம்: அமிருடின் நம்பிக்கைக் கூட்டணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும்!

905
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநிலத்தில் ஒருதலைப்பட்சமாக மதத்தை மாற்றுவதற்கு வழி வகுக்கும் சட்ட திருத்தங்கள் தொடர்பான விவகாரம் குறித்து நம்பிக்கைக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் கலந்துரையாடுமாறு சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரிக்கு பிகேஆர் அழைப்பு விடுத்துள்ளது.

கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமிருடின் கலந்து கொண்டார். இந்த விவகாரம் குறித்து அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக பிகேஆர் அரசியல் பணியகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த மசோதா ஆரம்பத்தில் சிலாங்கூர் மாநில சட்டசபையில், அதாவது ஜூலை 29 முதல் ஆகஸ்டு 9-ஆம் தேதி வரை பரிந்துரைக்க திட்டமிடப்பட்டு, தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சபாநாயகர் எங் சூ லிம் அதனை இரண்டு நாட்களுக்கு குறைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

தற்போது, ​​18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இஸ்லாத்திற்கு மாறுவதற்கு முன்பு பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்தத் திருத்தத்திற்குப் பிறகு அப்பா அல்லது அம்மா இருவரில் ஒருவரின் அனுமதி இருந்தால் மட்டுமே போதுமானது என்ற நிலையை ஏற்படும்.