Home One Line P1 பிரதமர் இந்தியர்களை புண்படுத்தும் வகையில் சொல்லை பயன்படுத்தவில்லை, மிகைப்படுத்தாதீர்கள்!

பிரதமர் இந்தியர்களை புண்படுத்தும் வகையில் சொல்லை பயன்படுத்தவில்லை, மிகைப்படுத்தாதீர்கள்!

848
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் லினாஸ் நிறுவனம் குறித்து கருத்து தெரிவித்த போது பறையாஎன்ற வார்த்தையைப் பயன்படுத்தியதை இன்று வியாழக்கிழமை முன்னாள் தூதர் டென்னிஸ் இக்னேஷியஸ் ஆதரித்துப் பேசினார். பிரதமரின் அச்செயல் இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறுவதன் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

மகாதீரின் அறிக்கையை கவனமாகப் படித்தால், பிரதமருக்கு மலேசிய இந்தியர்களை இழிவுபடுத்தும் எண்ணம் இல்லை என்பதைக் காட்டும் என்று டென்னிஸ் தெரிவித்தார்.

இந்த வார்த்தை இந்தியாவில் வேர்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், இப்போது அது நன்கு பயன்படுத்தப்படும், மேலும் நன்கு அறியப்பட்ட ஆங்கில வார்த்தையாகும். அதாவது அது தீண்டத்தகாததாகும்என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பிரதமர் வெறுமனே லினாஸை ஒரு வெளிநாட்டவர் போல் கருதுவது தவறு என்று சுட்டிக் காட்டினார்.” என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய அனுகுமுறை வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமரின் அக்கருத்து காப்பார் பிகேஆர் உட்பட பல தரப்பினரின் எதிர்ப்பினைப் பெற்றது. பிரதமருக்கு எதிராக காவல் துறையில் புகார் அறிக்கையும் அளிக்கப்பட்டது.

“நாம் கவலைப்பட வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளன, ஆனால், இது அவற்றில் ஒன்றல்லஎன்று அவர் கூறினார்.