Home One Line P1 அம்ரி சே மாட்டை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் காவல் துறை!

அம்ரி சே மாட்டை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் காவல் துறை!

577
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் காணாமல் போனதில் ஒரு முக்கிய சாட்சியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் காவல் துறையினர் பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர்.

சைபுல் பாஹாரி அப்துல் அசிஸ் இருக்கும் இடம் குறித்த தகவல்களை காவல் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

கடந்த ஆண்டு, அம்ரி காணாமல் போனதைக் குறித்து கேள்வி எழுப்பிய சுஹாகாம் குழு, காவல் துறையின் முன்னாள் சிறப்புக் கிளை ஒப்பந்தத் தொழிலாளியான சைபுல் பஹாரியை காப்பாற்றும் முயற்சியில் அவரைச் சார்ந்த குறிப்புகள் மற்றும் இணைப்புகளை மறைக்க ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டதாக காவல் துறையை குற்றம் சாட்டியது.

#TamilSchoolmychoice

சைபுல் பஹாரியின் தங்க நிற டொயோட்டா வியோஸ் கார் மூன்று நாட்களுக்கு அம்ரியின் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்தது காண முடிந்ததாகக் கூறப்படுகிறது.  இது குறித்து, அவர் விசாரணைக் குழு முன் சாட்சியமளிக்க தொடர்ந்து மறுத்து விட்டார்.

அப்போதைய காவல் துறை தலைவரான முகமட் புஜி ஹருண், சைபுல் பஹாரி காவல் துறையில் பணியாற்றிய பொது மக்களில் ஒருவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

அம்ரி குடும்பத்தின் வழக்கறிஞர் டேவிட் மொராய்ஸின் கூற்றுப்படி, சைபுல் பஹாரி கடந்த 2017-ஆம் ஆண்டில் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டார் என்று கூறியிருந்தார்.

அம்ரி கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 24-ஆம் தேதி காணாமல் போனார்.