Home One Line P2 பிரிட்டன்: செப்டம்பரில் நாடாளுமன்றம் இடைநீக்கம்!

பிரிட்டன்: செப்டம்பரில் நாடாளுமன்றம் இடைநீக்கம்!

717
0
SHARE
Ad

பிரிட்டன்: பிரெக்ஸிட் காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் செப்டம்பரில் தங்கள் பணியைத் தொடங்கிய சில நாட்களிலேயே நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, அரசியின் உரை அக்டோபர் 14-ஆம் தேதி இடம் பெறும் என்றும், அதில் தமது திட்டங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தடை செய்யும் சட்டம் ஒன்றை அக்டோபர் 31-ஆம் தேதி நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவைப்படும் காலம் இருக்காது என்றும், இது அரசமைப்புச் சட்ட விதிமீறல் என்றும் ஹவுஸ் ஆப் காமன்ஸ் அவைத் தலைவர் ஜான் பெர்கோ தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின் தெரிவித்துள்ளார்.