Home One Line P2 “வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துங்கள்!”- ஐஎஸ்

“வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துங்கள்!”- ஐஎஸ்

1051
0
SHARE
Ad

சிரியா: வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஐஎஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவின் நிருவாகத்துக்கு உட்பட்ட ஜம்முகாஷ்மீரின் தன்னாட்சி உரிமையை பாஜக தலைமையிலான இந்திய அரசு நீக்கியதே இதற்கு பின்புலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஐஎஸ்ஸின் முதன்மை வார இதழான அல்நாபாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடித் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமில் ஆகஸ்டு 22-ஆம் தேதியிடப்பட்ட இதழில் இது குறித்து பகிரப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய வளைகுடா நாடுகளின் சுற்றுப்பயணத்தை இது மேற்கோள் காட்டியது.

#TamilSchoolmychoice

அரபு நாடுகளில் வாழும் ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு, தமது நாடுகளில் வாழும் இந்துக்களை பணக்காரர் அல்லது ஏழை என பாரபட்சம் பாராமல், அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து வெளியேற்றும் கடமை இருப்பதாக அந்த இதழின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அரபு நாடுகளில் இந்தியாவை சேர்ந்த மில்லியன் கணக்கானோர் பல்வேறுபட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த கட்டுரையில், மோடி தலைமையின் கீழ், இந்தியாவிற்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் வெளிநாட்டு உறவுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.