கோலாலம்பூர்: இனம், மதம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் சம்பதமாக நாட்டில் தற்போது பிரச்சனைகள் அதிக சீற்றத்துடன் எழுந்து வருவதாகவும், அதன் சீற்றத்தைக் குறைக்குமாறும் உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.
காவல் துறையினர் சேகரித்த தகவல்களின்படி, இந்த மூன்று விவகாரங்களில், கடந்த ஆண்டைக் காட்டிலும், அதன் சீற்றம் இரு மடங்காக அதிகரித்துள்ளன என்று அவர் கூறினார்.
“தற்போதைய சூழ்நிலையில், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன மற்றும் மத உணர்வின் அடிப்படையில் நடக்கும் சம்பங்களின் சீற்றத்தை நாம் குறைக்க வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிவுரையக் கேளாமல் மீண்டும் இம்மூன்று விவகாரங்களில் தீவிரமாக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.