Home One Line P1 அரபு அமீரகத்தில் மோடிக்கு அமோக வரவேற்பு, உயரிய விருது வழங்கப்படவுள்ளது!

அரபு அமீரகத்தில் மோடிக்கு அமோக வரவேற்பு, உயரிய விருது வழங்கப்படவுள்ளது!

714
0
SHARE
Ad

புது டில்லி: மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் மோடி, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.

இன்று சனிக்கிழமை அந்நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் சயீட் (Order of Zayed) விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது

நேற்று வெள்ளிக்கிழமை அமீரகத்திற்கு வந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்கள் பல்வேறு துறை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று அபுதாபி இளவரசர் ஷேக் முகமட் பின் சயீதை மோடி சந்தித்து பேசுகிறார்.