கோலாலம்பூர்: நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்டிபி நிதி மோசடி வழக்கு விராசணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆறாவது சாட்சியான முகமட் நூர் அகமட்டை விசாரித்து முடித்ததும், வழக்கு விசாரணையை இன்று வியாழக்கிழமை ஒத்திவைக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் தலைவர் கோபால் ஸ்ரீ ராம் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
ஏழாவது சாட்சியை விசாரிக்க ஒரு நீண்ட அமர்வை அரசு தரப்பு எதிர்பார்க்கிறது, ஏனெனில் 177 ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ ராம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“இது பொருத்தமாக இருந்தால், அதை செவ்வாய்க்கிழமை காலைக்கு ஒத்திவைக்க விரும்புகிறோம்” என்று ஸ்ரீ ராம் கூறினார்.
இருப்பினும், நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுவேரா, விசாரணையை ஒத்திவைக்க மறுத்துவிட்டார்.
இவ்விசாரணையில் ஏற்கனவே சில நாட்கள் இழப்பு இருப்பதாக நீதிபதி கூறினார். மேலும் சாட்சிகளை தயார் படுத்த அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அனுமதி வழங்கி விசாரணையை தற்காலிகமான நிறுத்தி வைத்தார்.