Home One Line P1 மலேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடிய கூகுள்

மலேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடிய கூகுள்

1615
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று கொண்டாடப்படும் 62-வது மலேசிய சுதந்திர தினத்தை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் தனக்கே உரிய முறையில் கொண்டாடியது.

ஏதாவது முக்கிய தினங்கள் அல்லது யாராவது முக்கியத் தலைவர்களை நினைவுகூருவது என்றால் அதற்கேற்ப தனது தேடுபொறியை (Search engine) மாற்றி வடிவமைப்பது கூகுளின் வழக்கம்.

அந்த வகையில் இன்று கூகுளின் தேடுபொறி பக்கத்தைத் திறந்த மலேசியர்கள் புதிய தோற்றத்தில், புதிய வடிவமைப்போடு கூடிய அந்தப் பக்கத்தைப் பார்த்து அகமகிழ்ந்திருப்பார்கள்.

#TamilSchoolmychoice

மலேசியாவின் தேசிய மலரான பூங்கா ராயாவின் படங்களோடு, பார்த்ததும் மலேசியாவையும், அதன் இன்றைய சுதந்திர தினத்தையும் நினைவுபடுத்தும் வண்ணம் அமைந்திருந்த அந்தப் பக்கத்தை மேலே காணலாம்.