Home One Line P1 “இரண்டாவது முறையாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவது எளிதல்ல, பணிகளை செய்து முடிக்க வேண்டும்”- பிரதமர்

“இரண்டாவது முறையாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவது எளிதல்ல, பணிகளை செய்து முடிக்க வேண்டும்”- பிரதமர்

754
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலிலும் கடந்த கால வெற்றியைத் தொடர நினைத்தால், நம்பிக்கைக் கூட்டணி செய்து முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளது என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெறுவது எளிதல்ல என்பதால், வரும் தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணி அதிக தடைகளை எதிர்கொள்ளும் என்று பிரதமர் கூறினார்.

கடந்த தேர்தலில், முக்கிய பிரச்சனை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக். இருப்பினும், அடுத்த தேர்தலில் நிலைமை ஒரே மாதிரியாக இருக்காது. மக்கள் நம்பிக்கைக் கூட்டணியின் செயல்திறனை சோதிப்பார்கள். அது ஒரு கடினமான பணியாக இருக்கும். பொதுவாக இரண்டாவது முறை ஒருபோதும் எளிதானது அல்ல,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

டாக்டர் மகாதீர் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் உள்ள பெவிலியன் விற்பனை மையத்தில் எம் ஃபார் மலேசியா’ ஆவணப்பட திரையீட்டு விழாவில் இவ்வாறு பேசினார். டாக்டர் மகாதீரின் கூற்றுப்படி, எம் ஃபார் மலேசியா இதுவரை நம்பிக்கைக் கூட்டணி போராடியதை நினைவூட்டுவதாக இருக்கும்.

14-வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் புதிய மலேசியாவை உருவாக்க தேசிய முன்னணியை தோற்கடிக்க நம்பிக்கைக் கூட்டணி மேற்கொண்ட போராட்டத்தின் உண்மையான கதை எம் ஃபார் மலேசியா என்று பிரதமர் விவரித்தார்.

இந்த படம் ஒரு பக்கத்தின் கதையை மட்டும் சொல்லாத உண்மையான கதை. நீங்கள் புகழப்படுவதைப் போலவே, நீங்கள் விமர்சிக்கப்படும் பொழுதும் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை இது அனைவருக்கும் கற்பிக்கிறது,” என்று அவர் கூறினார்.