Home One Line P2 பேரணிக்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு, அவரது மகன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்!

பேரணிக்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு, அவரது மகன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்!

917
0
SHARE
Ad

ஐதரபாட்: தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பு பேரணிக்கு முன்னதாக, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோகேஷ் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜெகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியால், கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு கோரியிருந்தது

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், அதன் கட்சி தொண்டர்களில் 8 பேரைக் கொன்றதாகவும், மேலும் பலரைத் தாக்கியுள்ளதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.