சென்னை: அண்மையில் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி மொழியினை நாட்டின் ஒரே மொழியாக இருக்க வேண்டும் கருத்து தெரிவித்ததற்கு பிற மாநிலங்கள் அளவில் பெறும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், திமுக, வருகிற 20-ஆம் தேதி மாவட்டங்களின் அனைத்துத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. முன்னதாக, அமித்ஷா தனது டுவீட்டர் பதிவில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொது மொழி இருக்க வேண்டியது அவசியம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
‘இந்திய நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி என்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்குப் பிறகு இந்தி திணிப்பை குறித்த பதிவுகளும் விவாதங்களும் பரவலாக மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் நீதி மய்யக் கட்சித் தலவரான கமல்ஹாசன் இது குறித்த ஒரு காணொளியில், இந்தி மொழியினை பிற மாநிலங்களில் திணிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.