Home One Line P2 பிகில்: இசை வெளியீட்டு தேதியை அறிவித்து, புதிய விளம்பர பதாகையை வெளியிட்ட படக்குழு!

பிகில்: இசை வெளியீட்டு தேதியை அறிவித்து, புதிய விளம்பர பதாகையை வெளியிட்ட படக்குழு!

792
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு மகுடம் சேர்க்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி இரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பைப் பெற்றன. இதனிடையே, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை வியாழக்கிழமை (செபடம்பர்19) சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பிகில் படத்தின் விளம்பர பதாகையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்தில் விஜய் லுங்கி கட்டி கையில் கத்தியுடன் நிற்கிறார்.

#TamilSchoolmychoice