Home One Line P2 பிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது!

பிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது!

1501
0
SHARE
Ad

சென்னை: பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், நேற்று புதன்கிழமை அப்படத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ள  பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, ஒரு விளம்பர பதாகையையும் உடன் வெளியிட்டிருந்தனர்.

. ஆர். ரஹ்மான் இசையில் உனக்காக பாடலின் பாடல் வரிக் கொண்ட காணொளி நேற்று மாலை வெளியிடப்படும் என்று அட்லி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், இன்று நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு இப்படத்தில் உள்ள பாடல்கள் முழுமையாக வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ‘உனக்காக’ பாடலின் பாடல் வரி காணொளியைக் காணலாம்: