புதுடில்லி – இந்தியாவில் வெங்காயத்தின் விலைகள் உயர்ந்துவருவதைத் தொடர்ந்து பொதுமக்களிடத்தில் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கும் நிலையில், வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடை உடனடியாக அமுலுக்கு வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.
வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் தொடர் மழையாலும், வெள்ள அபாயத்தாலும் பாதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலை புதுடில்லியிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் கிலோவுக்கு 80 ரூபாயாக விலை உயர்ந்தது.
ஏற்றுமதிக்கான தடையின் மூலம் வெங்காய விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஏராளமான அளவில் வெங்காயம் மலேசியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தத் தடையைத் தொடர்ந்து மலேசியாவிலும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயரலாம் எனக் கருதப்படுகிறது.
இந்தியர்களின் உணவிலும், சமையலிலும் வெங்காயம் முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.