Home One Line P2 வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்குகிறது

வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்குகிறது

696
0
SHARE
Ad

மும்பை: வெங்காய ஏற்றுமதிக்கான தடையை ஜனவரி 1 முதல் நீக்க இந்தியா திங்கட்கிழமை முடிவு செய்தது. கடந்த சில வாரங்களாக வெங்காய விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அனைத்து வகையான வெங்காயங்களின் ஏற்றுமதியும் அனுமதிக்கப்படும் என்று வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர் உள்நாட்டுப் பொருட்களைப் பாதுகாக்க வெங்காயம் ஏற்றுமதியை இந்தியா செப்டம்பர் மாதம் தடை செய்தது.

#TamilSchoolmychoice

உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. இது தெற்காசிய சமையலின் பிரதானமாகும். வங்காளதேசம், நேபாளம், மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் இந்திய ஏற்றுமதிகளை நம்பியுள்ளன.

அரசாங்க நிறுவனமான தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை தொகுத்த தரவுகளின்படி, வெங்காயத்தின் மொத்த விலை கடந்த நான்கு வாரங்களில் பாதியாக அதிகரித்துள்ளது.