கோலாலம்பூர்: மலேசிய ஆயுதப்படை (எம்ஏஎப்) இணைய அமைப்பு திங்கட்கிழமை (டிசம்பர் 28) தாக்குதலுக்கு இலக்காகியது.
“எம்ஏஎப்புக்கு சொந்தமான இணைய தரவுகளில் ஊடுருவல் நடந்ததை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்,” என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ அபெண்டி புவாங் கூறினார்.
“இந்த சம்பவம் சைபர் மற்றும் மின்காந்த பாதுகாப்பு பிரிவு, சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் (சிடிஓசி) ஆகியவற்றால் கண்டறியப்பட்டது. தாக்குதல் நடந்தவுடனேயே, இரண்டும் முக்கியமான தரவுகளின் இருப்பிடத்தை மறைக்கவும், ஊடுரருவிகளால் குறிவைக்கப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கவும் வழிமுறைகள் எடுக்கப்பட்டன,” என்று அவர் செவ்வாயன்று (டிசம்பர் 29) ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தற்காப்பு அமைச்சகம் மற்றும் எம்ஏஎப்பின் தரவுகள் மீதான தொடர்ச்சியான இணைய தாக்குதல் முயற்சிகள் குறித்து எம்ஏஎப் அறிந்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.