Home One Line P1 ‘ரோந்து கப்பல் விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்படுவதற்குத் தயார்’- சாஹிட்

‘ரோந்து கப்பல் விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்படுவதற்குத் தயார்’- சாஹிட்

488
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்காப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின்னர்தான், கடற்படைக்கு, 9 பில்லியன் மதிப்புடைய ஆறு ரோந்து கப்பல்களை (எல்சிஎஸ்) பெறாத சூழல் நடந்தது என்று அகமட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

போஸ்டெட் நேவல் ஷிப்யார்ட் (பிஎன்எஸ்) சம்பந்தப்பட்ட போர் கப்பல்கள் பெறப்படாத பிரச்சனை 2019- ஆம் ஆண்டில் மட்டுமே நிகழ்ந்ததால், அதில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

“நான் 2013-இல் தற்காப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகினேன். 2019- இல் பணியாற்றவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த பிரச்சனை எனது அறிவுக்கு அப்பாற்பட்டது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, நேற்று தேசிய பொது கணக்காளர் குழு தலைவர் வோங் கா வோ, ஆறு ரோந்து கப்பல்களைப் பெறுவதற்கு கால தாமதம் ஏற்படுவதை விசாரிக்க சாஹிட் ஹமிடியை குழு அழைக்கும் என்று தெரிவித்திருந்தார்.