பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரெஞ்சு குடியரசின் அதிபருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளது.
அதிபர் மக்ரோன் ஏழு நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார்.
எனினும், இயங்கலை வாயிலாக அவர் தனது பணிகளை தொடர்வார் என்று அலுவலகம் கூறியது.
உலகளவில் இளம் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் இமானுவேல் மக்ரோன் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு குரல் கொடுத்ததை அடுத்து, இமானுவேல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். மேலும், பல்வேறு உலக நாடுகள், மலேசியா உட்பட அவரது இஸ்லாமிய மதத்திற்கும், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த செய்தியை அடுத்து, அவர் மீண்டு வர வேண்டும் என்று பலர் பிரார்த்தனை செய்கையில், பல இஸ்லாமிய மக்கள் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள். அவர் பேசியதற்கு, கடவுளின் பரிசு இது என்று மக்கள் கூறிவருகிறார்கள்.
இதற்கு முன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ உள்ளிட்ட அரசு தலைவர்கள் இத்தொற்றுக்கு ஆளாகி குணமடைந்துள்ளனர்.