Home One Line P2 கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி குடும்பங்களை கெடுக்கிறது!

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி குடும்பங்களை கெடுக்கிறது!

676
0
SHARE
Ad

சென்னை: நன்றாக இருக்கும் குடும்பங்களை கெடுப்பதுதான் கமல்ஹாசன் வேலை என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போது, கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். 70 நாட்கள் கடந்து விட்ட நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியால் எந்த பயனும் இல்லை என்று முதல்வர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஆளும் அதிமுக அரசை கடுமையாக அவர் விமர்சித்து வருவதுடன், எம்.ஜி.ஆரின் நீட்சி தாம் என்றும் கூறி வருகிறார்.

#TamilSchoolmychoice

“70 வயதான அவருக்கு என்ன தெரியும். கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முடிகிறதா. அதனைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டு போய்விடும், நன்றாக இருக்கும் குடும்பமும் கெட்டு போய்விடும்,” என்று பழனிசாமி கூறியுள்ளார்.