Home One Line P1 பிப்ரவரி மாதம் வரை வெங்காய விலையில் ஏற்றம் இருக்கும்!- பாமா

பிப்ரவரி மாதம் வரை வெங்காய விலையில் ஏற்றம் இருக்கும்!- பாமா

747
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் வெங்காய விலையில் ஏற்றங்கள் இருக்கும் என்று மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் (பாமா) எதிர்பார்க்கிறது. இந்தியாவின்வெங்காயஏற்றுமதி குறைந்த காரணத்தினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

இந்திய நாட்டில் வெள்ளத்தைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக இந்திய வெங்காய விநியோக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், சீனா, பாகிஸ்தான் மற்றும் எகிப்து போன்ற பிற நாடுகளிலிருந்து 106,395 டன்களில் சிவப்பு வெங்காயத்தை இறக்குமதி செய்வதன் மூலம் சில உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாடு எடுத்துள்ளதாகவும் பாமாவின் தலைவர் இஷாக் இஸ்மாயில் தெரிவித்தார்.

மலேசியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சில நாடுகளில் இருந்து 60 விழுக்காடு வெங்காயங்களை நாம் இறக்குமதி செய்கிறோம். இந்த இறக்குமதியில் 70 விழுக்காடு இந்தியாவில் இருந்துதான் வருகிறது. ஆனால், இந்திய நாடு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் ஏற்றுமதியை முற்றிலுமாக தடை செய்துள்ளது.”

#TamilSchoolmychoice

ஊடக அறிக்கையின்படி, ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 4 ரிங்கிட்டாக இருந்தது, ஆனால், தற்போது ஒரு கிலோ 12 ரிங்கிட்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.