Home One Line P1 “நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுக்கு மகாதீரை எதிர்கொள்ள வலு இல்லை”- சைட் ஹுசேன்

“நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுக்கு மகாதீரை எதிர்கொள்ள வலு இல்லை”- சைட் ஹுசேன்

917
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சைட் ஹுசேன் அலி நம்பிக்கைக் கூட்டணி மற்றும் அதன் தலைவர்களை கண்டித்துள்ளார். அவர்கள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை எதிர்கொள்ள இயலாத சூழலில் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

நம்பிக்கைக் கூட்டணியில் மிக உயர்ந்த சக்தியாக இருப்பது கட்சித் தலைவர்கள் குழு, மகாதீர் அல்ல என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையின் வாயிலாக ஹுசேன் கூறினார்.

உண்மையில், மகாதீர் எப்போது பதவி விலக வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான மிக உயர்ந்த அதிகாரம் கட்சி தலைவர்கள் குழுவிற்க்கு உண்டு. மகாதீரை இப்போது ஓய்வு பெறுமாறு கேட்கலாம். எப்போது அவர் பதவியை விட்டுக் கொடுக்க விரும்புகிறார் என்பதை தீர்மானிக்க மகாதீருக்கு அதிகாரம் இல்லை. அன்வார், மொகிதின் யாசின், முகமட் சாபு மற்றும் லிம் கிட் சியாங் ஆகியோர் மகாதீரின் ஆட்டத்திற்கு ஆமோதிக்கும் நிலைக்கு வந்து விட்டார்களா என்று மக்கள் கேட்கிறார்கள்?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட அதிகார மாற்றம் குறித்த ஒருமித்த கருத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட மகாதீரின் அரசியல் முன்னேற்றத்தை அவர்கள் உணரவில்லையா? ”என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

15-வது பொதுத் தேர்தலுக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பிரதமர் பதவியை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நேற்று சைட் ஹுசின் கூறியிருந்தார்.

அவ்வாறு செய்யத் தவறினால், நம்பிக்கைக் கூட்டணி சரிந்து விடும். மகாதீர் உண்மையிலேயே மலேசியாவை நேசிக்கிறார் என்றால், அவர் உடனடியாக பதவி விலகி, நாட்டை மீண்டும் கட்டமைக்க அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.