Home One Line P1 “நாட்டின் வருவாயை அதிகரிக்க அரசாங்கம் புதிய வரி அமைப்பை அறிமுகப்படுத்தும்!”- மகாதீர்

“நாட்டின் வருவாயை அதிகரிக்க அரசாங்கம் புதிய வரி அமைப்பை அறிமுகப்படுத்தும்!”- மகாதீர்

634
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் வருவாயை அதிகரிக்க அரசாங்கம் சில புதிய வரி அமைப்புகளை அறிமுகப்படுத்தக்கூடும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

இருப்பினும், அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி மக்களுக்கு சுமையாக இருக்காது என்று டாக்டர் மகாதீர் உறுதியளித்தார்.

நாம் பயன்படுத்திய வரி முறைமை முறையான மற்றும் ஒழுங்கான முறையில் ஒழுங்கமைக்கப்படவில்லை, பலர் வரி செலுத்தாமல் இருக்கிறார்கள். நாம் அதனை சரிப்படுத்துவோம். மேலும், மக்களுக்கு குறைந்த சுமையாக இருக்கும் புதிய வரிகளை நாம் அறிமுகப்படுத்த வேண்டும்என்று கோலாலம்பூரில் இன்று சனிக்கிழமை அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில், பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன.

இரண்டு நாட்களுக்கு முன்பு, மக்கள் விரும்பினால் ஜிஎஸ்டியை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராயும் என்று மகாதீர் கூறினார்.