Home One Line P1 முந்தைய அரசாங்கத்தால் 4 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக நிலங்கள் விற்கப்பட்டன!- குவான் எங்

முந்தைய அரசாங்கத்தால் 4 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக நிலங்கள் விற்கப்பட்டன!- குவான் எங்

753
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 2018-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணி நாட்டைக் கைப்பற்றியதிலிருந்து அரசாங்கம் தனது நிலத்தை விற்றுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிதி அமைச்சு இன்று புதன்கிழமை மறுத்துள்ளது.

இது குறித்து பேசிய அமைச்சர் லிம் குவான் எங், அதே நேரத்தில் 2010 முதல் 2017 வரை மத்திய அரசாங்கத்தின் 4 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிலங்கள் முந்தைய அரசாங்கத்தால் விற்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

அந்த காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான பெரும்பாலான நில விற்பனையானது திறந்த ஒப்பந்தங்களைக் காட்டிலும் நேரடி பேச்சுவார்த்தைகளின் மூலம் நடத்தப்பட்டதுஎன்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பெடரல் லேண்ட் கமிஷனுக்கு (பிடிபி) சொந்தமான மொத்தம் 14 நில இடங்கள் கோலாலம்பூரைச் சுற்றியும், சிலாங்கூரில் இரண்டு நிலங்கள் 2010 முதல் 2019 செப்டம்பர் வரை விற்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.