Home One Line P1 மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலக வேண்டும்!- ஜசெக இளைஞர் பிரிவு

மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலக வேண்டும்!- ஜசெக இளைஞர் பிரிவு

794
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: மலாயா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அப்துல் ராகிம் ஹாஷிம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக ஜசெக இளைஞர் பிரிவு விமர்சித்துள்ளது. மேலும் அவர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

மாணவர் எடன் கோன் ஹுவா என் நேற்று செவ்வாய்க்கிழமை தனது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டதன் தொடர்பில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

விழாவின் போது அப்துல் ராகிமுக்கு எதிராக கோன் எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதைத் தடுக்க பல்கலைக்கழக துணை காவல் துறையினர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஒரு பட்டதாரி தனது பட்டத்தைப் பெறுவதைத் தடுப்பதில் துணைவேந்தர் தனது அதிகாரத்தை மீறிவிட்டார் என்று அது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அப்துல் ராகிம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை ஜசெக இளைஞர் பிரிவு கண்டிக்கிறது.”

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆதரவாளர்களால், மாணவர் ஆர்வலர்கள் வளாகத்திற்கு வெளியே தாக்கப்பட்டபோது அவர் (அப்துல் ரஹீம்) அமைதியாக இருந்தார். மலாய் தன்மான காங்கிரஸில் இன அறிக்கைகளை வெளியிட்டார். மாணவர் வோங் யான் கே பேசுவதற்கும் தமது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காவல் துறையில் புகார் அறிக்கையை உருவாக்கினார். இப்போது அவர் தனது பட்டத்தைப் பெறுவதைத் தடைசெய்துள்ளார்.”

துணைவேந்தர் தனது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டார் என்பது தெளிவாகிறது, உடனடியாக பதவி விலக வேண்டும்என்று அது கூறியுள்ளது.