கோலாலம்பூர்: அமானா மற்றும் ஜசெகவை புறக்கணித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரச்சாரத்தை நகர்த்துவதற்கு முன்னாள் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் திட்டமிட்டு வருவதாக நம்பிக்கைக் கூட்டணி குறிப்பிட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், ஹிஷாமுடின்ஒரு சிலருடன் இணைந்து இந்த திட்டத்தை முன்மொழிவதாக நம்பிக்கைக் கூட்டணி குறிப்பிட்டிருந்தது.
“தனது எழுத்துக்கள் மற்றும் நேர்காணல்களில் ஹிஷாமுடின், இனம் சார்ந்த அரசியல் மற்றும் நிர்வாகத்திற்கு திரும்ப வாய்ப்புள்ளது என்பதனை சமிக்ஞை கொடுத்துள்ளார். இது ஒரு காலாவதியான அரசியல் நடைமுறை, நம்பிக்கைக் கூட்டணி உள்ளடக்கிய அரசியலுடன் இது முற்றிலும் முரண்படுகிறது” என்று அது கூறியது.
நம்பிக்கைக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சைபுடின் அப்துல்லா, பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், பெர்சாத்து பொதுச்செயலாளர் மார்சுகி யஹ்யா, அமானா பொதுச்செயலாளர் அனுவார் தாஹிர் மற்றும் ஜசெக அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் ஆகியோர் அந்த அறிக்கையில் கையெழுதுத்திட்டுள்ளனர்.