Home One Line P1 மலாயா பல்கலைக்கழகம் வோங்கின் சான்றிதழை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்!

மலாயா பல்கலைக்கழகம் வோங்கின் சான்றிதழை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்!

684
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: மலாயா பல்கலைக்கழக மாணவர் வோங் யான் கே கடந்த செவ்வாய்க்கிழமை பட்டமளிப்பு விழாவின் போது, அப்பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்ததற்கு காவல் துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை சாட்சியமளிக்க அவர் பெட்டாலிங் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அவரது வழக்கறிஞர் அஷீக் அலி கூறுகையில், வேண்டுமென்றே அவமதித்ததற்காக, வோங், தண்டனைச் சட்டம் 504-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆதாரமுள்ள விமர்சனங்களை தமது கட்சிக்காரர் மேற்கொண்டதாகவும், இதனை ஓர் அவமானமாகக் கருதப்படக்கூடாது என்றும் அஷிக் கூறினார்.

எனது கட்சிக்காரர் அக்குற்றச்சாட்டுகளில் குற்றவாளி அல்ல. அவர் ஒருபோதும் கடுமையான வார்த்தைகளை உச்சரிக்கவில்லை அல்லது துணைவேந்தர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தவில்லை. மலாய் தன்மான காங்கிரஸில் துணைவேந்தரின் நிலைப்பாடு ஒற்றுமைக்கு எதிராக இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்” என்று கூறினார்.

கூடிய விரைவில் காவல் துறையினருக்கு உதவ அப்துல் ராகிம் அழைக்கப்படலாம் என்றும் அஷீக் கூறினார்.

பல்கலைக்கழகம், ஒரு மாணவரின் சான்றிதழை இரண்டு சூழ்நிலைகளால் மட்டுமே தடுக்க முடிவும். முதலாவதாக, அவர் ஒரு கடுமையான குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், இரண்டாவதாக, அவர் சட்டவிரோத பட்டம் பெற முயற்சிப்பதாகக் கண்டறியப்பட்டால். வோங் இவ்விரண்டிலும் சிக்கவில்லை.” என்று அஷீக் கூறினார்.

மலாயா பல்கலைக்கழகம் தமது கட்சிக்காரரின் சான்றிதழை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் அவர் மேலும் கூறினார்.