Home One Line P2 ஜோகோவி பதவி ஏற்பு: 30,000-க்கும் மேற்பட்ட காவல் துறை, இராணுவ வீரர்கள் நியமனம்!

ஜோகோவி பதவி ஏற்பு: 30,000-க்கும் மேற்பட்ட காவல் துறை, இராணுவ வீரர்கள் நியமனம்!

741
0
SHARE
Ad

ஜகார்த்தா: இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோ (ஜோகோவி) வருகிற ஞாயிற்றுக்கிழமை, 2019-2024-க்கான அதிபராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், 30,000-க்கும் மேற்பட்ட காவல் துறை மற்றும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட நியமிக்கப்பட்டுள்ளதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

57 வயதான ஜோகோவி இந்தோனிசிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மதியம் 2 மணிக்கு பதவியேற்க உள்ளார். மேலும் நாட்டின் மூன்றாவது பெரிய ஜனநாயகத்தை இரண்டாவது முறையாக அவர் தொடர்ந்து வழிநடத்த உள்ளார்.

ஜோகோவியின் முதல் தவணை பதவிக்காலம் அக்டோபர் 19-ஆம் தேதி முடிவடைகிறது. இரண்டாவது முறையாக, ஜோகோவி தனது புதிய துணை அதிபரான 76 வயது மருஃப் அமினுடன் இணைந்து செயல்பட உள்ளார். அவரது முந்தைய துணை அதிபரான ஜுசுப் கல்லா ஏற்கனவே இரண்டு தவணைகள் அப்பதவியில் இருந்ததால், மீண்டும் அப்பதவியை அவர் ஏற்க தகுதியில்லாதவராகி உள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தோனிசிய தேர்தல் சட்டப்படி அதிபரும், துணை அதிபரும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் அல்லது இரண்டு தவணைகள் மட்டுமே அப்பதவிகளை வகிக்க முடியும் என்று விதித்துள்ளது.

77 வயதான ஜூசுப், சுசிலோ பாம்பாங் யுடோயோனோ அதிபராக பதவி வகித்தபோது துணை அதிபராக இருந்தார்.

டாக்டர் மகாதிர் முகமட் உட்பட 17 வெளிநாட்டுத் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.