Home One Line P1 மாணவர்களின் உழைப்புக்கு சான்றான சான்றிதழை திரும்பப் பெறுவது ஏற்றுக்கொள்ளப்படாது!- சைட் சாதிக்

மாணவர்களின் உழைப்புக்கு சான்றான சான்றிதழை திரும்பப் பெறுவது ஏற்றுக்கொள்ளப்படாது!- சைட் சாதிக்

660
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கருத்து தெரிவிக்கும் உரிமை மதிக்கப்படுகின்ற போதிலும், ஆட்சேபனைகளை வெளிப்படுத்த சரியான இடத்தினை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் தெரிவித்தார்.

இருப்பினும், மாணவர்கள் பெற்ற சான்றிதழை திரும்பப் பெறுவது, அவர்களை தண்டிப்பது நியாயமான நடவடிக்கையாக இல்லை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக படித்த பிறகு மாணவர்களின் சான்றிதழ்கள் பறிக்கப்படுவது சரியான முடிவாக இல்லை என்றும், அம்மாணவரின் செயலை எதிர்க்க, விமர்சிக்க விரும்புவர்கள் தாராளமாக செய்யலாம் என்றும் குறிப்பிட்டார். ஆனால், அவருடைய உழைப்பின் காரணமாக கிடைக்கப்படும் சான்றிதழை வழங்காமல் இருப்பது சரியான நடவடிக்கை இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, பிரதமர் மகாதீர் முகமட் இம்மாதிரியான எதிர்ப்புகளை தெரிவிக்க, அதற்கான இடமுண்டு என்றும், வோங்கின் அச்செயல் ஏற்றுக் கொள்ளப்படாதது என்றும் கூறியிருந்தார்.

சைட் சாதிக் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி, மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமைக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய மாணவரைக் குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருப்பதாக நம்பப்படுகிறது.