Home One Line P1 விடுதலைப் புலிகள்: கைதான சாதாரண மக்களுக்கு கைகொடுக்கும் மஇகா!

விடுதலைப் புலிகள்: கைதான சாதாரண மக்களுக்கு கைகொடுக்கும் மஇகா!

998
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி 12 நபர்கள் காவல் துறையினரால் சோஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஜசெகவைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், சாதாரணமான நிலையில் உள்ளவர்களுக்கு வழக்கறிஞர்களை மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சி நியமித்து உதவி செய்துள்ளது.

இந்த விவகாரத்தினால் பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தினருக்கு, முன்னாள் துணை அரசாங்க வழக்கறிஞரான டத்தோ காமாருல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சாதாரண நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாரும் முன்வந்து உதவி செய்ய இணங்காத நிலையில், மஇகா அவர்களுக்கு வழக்கறிஞர் சேவையை வழங்கி உதவ முன்வந்துள்ளதை கட்சி உறுப்பினர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், கட்சித் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் இந்த நடவடிக்கைக்கு அவர்கள் நன்றி கூறி வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 10 முதல்விடுதலைப் புலிகள் தொடர்பான நடவடிக்கையில் இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.