Home One Line P1 “அரசாங்கத்திற்கு 5 வருட கால அவகாசம் கொடுங்கள்!”- ரபிடா அசிஸ்

“அரசாங்கத்திற்கு 5 வருட கால அவகாசம் கொடுங்கள்!”- ரபிடா அசிஸ்

690
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடப்பு அரசாங்கத்தை மாற்ற மக்களுக்கு உரிமை உண்டு என்று முன்னாள் அம்னோ மூத்த தலைவர் ரபிடா அசிஸ் தெரிவித்தார். ஆயினும், அதன் திறன்களை முதலில் நிரூபிக்க நம்பிக்கைக் கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஆடைகளை மாற்றுவது போல் நாட்டை நிர்வகிப்பது எளிது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். தயவுசெய்து, ஐந்து வருடங்கள் கொடுங்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எதுவும் மாறவில்லை என்றால், உங்களுக்கு மாற்றுவதற்கு உரிமை உண்டு,” என்று அவர் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தேர்தல் வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதாக பலமுறை குற்றம் சாட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ரபிடா இவ்வாறு குறிப்பிட்டார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் செயல்திறனை குறுகிய காலத்தில் அளவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தயவுசெய்து அவர்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள். நம்மில் சிலர் சுற்றி உட்கார்ந்து விமர்சிக்கிறார்கள். ”என்று அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்க வேண்டடியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் இன்னும் எங்களின் முதல் தவணையை முடிக்கவில்லை. ஆனால், பல்வேறு வெளி மற்றும் உள்பிரச்சனைகளை கையாள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நாட்டில், எல்லோரும் தலைவராக இருக்க விரும்புகிறார்கள்.” என்று அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி அறிக்கை 200 பக்கங்கள் வரை உருவாக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ரபிடா விளக்கினார். முன்னதாக, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும், அரசாங்கம் தங்களின் சொந்த தேர்தல் அறிக்கையால் பலியாகியுள்ளதாக ஒப்புக் கொண்டிருந்தார்.