Home One Line P1 “நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணத்தை மகாதீர் கைவிட வேண்டும்!”- சார்லஸ் சந்தியாகு

“நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணத்தை மகாதீர் கைவிட வேண்டும்!”- சார்லஸ் சந்தியாகு

1034
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் பதவியை பிகேஆர் கட்சித் தலைவர் அன்வாரிடம் ஒப்படைக்கும் விவகாரம் தொடர்பாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எப்போதும் கேள்விகளை எழுப்பும் பதில்களை கூறி வருவதை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு விமர்சித்துள்ளார்.

மகாதீர் ஒரு தெளிவான பதிலைக் கொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் பெர்சாத்துவுடன் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து கேட்கும் ஊடகவியலாளர்களிடம், அவர் ஏன் ஒரு உறுதியான பதிலை அளிக்கவில்லை, ஆனால்அவர்கள் முயற்சி செய்யலாம்’,” என்று பதிலளிப்பதாக சார்லஸ் நேற்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தொடரும் என்ற செய்தியை மகாதீர் உறுதியாக கூற வேண்டும்.  மேலும் அவர் தனது நண்பர்களை விட்டு வெளியேறும் எண்ணம் வைத்திருக்கக்கூடாது.”

நாம் செய்ய வேண்டிய வேலை உள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்துதல், நிலையான வேலைகளை உருவாக்குதல், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தல், குற்றங்களை குறைத்தல் என பலவற்றை நாம் சரி செய்ய வேண்டும். அரசியலும் அதிகாரத்திற்கான போராட்டமும் பட்டியலில் இல்லைஎன்று அவ ர் கூறினார்.

ஹிஷாமுடின் ஹுசேன் கூறியது போல எதிர்க்கட்சியினர் பின் கதவு சலுகை அளிப்பது பொருத்தமானதல்ல என்று சார்லஸ் கூறினார். ஆயினும், இந்த விவகாரம் குறித்து ஹிஷாமுடின் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.