Home One Line P1 வாவே பயிற்சி மையத்திற்கு வேதமூர்த்தி திடீர் வருகை

வாவே பயிற்சி மையத்திற்கு வேதமூர்த்தி திடீர் வருகை

803
0
SHARE
Ad

சைபர்ஜெயா : மித்ராவின் முழு ஆதரவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெறும் இளைஞர்களை நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 17) பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி நேரில் சந்தித்து அங்குள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.

புத்ராஜெயாவில் உள்ள வாவே நிறுவனத்தில் லூமினாஸ் சிஸ்டம்ஸ் செண்டெரியான் பெர்ஹாட் ஒத்துழைப்பில் மித்ராவின் முழு ஆதரவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நூறு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நேரில் கண்டறியும் பொருட்டு சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையத்திற்கு திடீர் வருகை மேற்கொண்ட அமைச்சர், பயிற்சி மாணவர்களுடன் நீண்ட நேரம் செலவிட்டு, முழு விவரத்தையும் கேட்டறிந்தார்.

#TamilSchoolmychoice

கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய இந்தத் திட்டத்தில் ‘பி-40’ இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதில், ஏற்கெனவே மூன்று கட்டங்களாக 75 பட்டதாரிகள் தகவல் தொழில்நுட்பத் துறை பயிற்சியை முடித்து Dell, IBM, MAXIS, DXC தொழில்நுட்பம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியிலும் அமர்ந்து வருகின்றனர்.

தற்பொழுது, நான்காவது கட்ட பயிற்சி நடைபெறுகின்ற சூழலில்தான், அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இந்த வருகையை மேற்கொண்டார்.அப்போது அவருடன் மித்ரா தலைமை இயக்குநர் ம.மகாலிங்கம், அமைச்சரின் சிறப்பு அதிகாரி வே.மாதவன், வாவே நிறுவன அதிகாரிகள், பத்திரிகைச் செயலாளர் ஷுக்ரி, லூமினாஸ் நிறுவனத்தின் அதிகாரி ஆ.ஜெய்கணேஷ் உட்பட மற்றவர்களும் உடன் இருந்தனர்.