Home One Line P2 பாலிஒன் எச்டியில் ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படம் உட்பட 4 படங்கள்!

பாலிஒன் எச்டியில் ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படம் உட்பட 4 படங்கள்!

1108
0
SHARE
Ad

பாலிவூட் நடிப்புத்துறையில் பல பிரபல கலைஞர்களின் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷன் அடங்குவார். அவர் நடிப்பில் அண்மையில் திரையரங்களில் வெளிவந்த  சூப்பர் 30’ திரைப்படத்தைத் தற்போது பாலிஒன் எச்டி அலைவரிசை 251-இல் கண்டு மகிழலாம். அதுமட்டுமின்றி, இம்மாதம்பிளாங்’, ‘ஆர்டிகிள் 15’, ‘கலங்க்மற்றும்கபீர் சிங்ஆகிய திரைப்படங்கள் கண்டு களிக்கலாம்.

சூப்பர் 30 (Super 30)

இயக்குனர் விக்கி பாஹ்ல் இயக்கி ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ள சூப்பர் 30 திரைப்படத்தில் ஒரு கணிதவியலாளர்ஆசிரியரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பொருளாதாரத்தில் பின்தங்கிய, படிப்பில் ஆர்வமிக்க 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான பயற்சி, தங்கும் இடம், உணவு எல்லாவற்றையும் வழங்கி, இந்தியாவின் உயரிய கல்வி அமைப்பான ஐ..டியின் தகுதித் தேர்வுகளுக்கு தயார்படுத்துகிறார்.

ஆர்டிகிள் 15 (Article 15)

கடந்த ஜூன் மாதம் திரையரங்களில் வெளியான பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்தஆர்டிகிள் 15′ திரைப்படம் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் சாதி பாகுபாடு மற்றும் வன்முறை குற்றங்களைக் களைய களத்தில் இறங்குகிறார்.

அவரின் முயற்சிகள் வெற்றி பெறுகிறா இல்லா என்பதுதான் கதையாகும். இத்திரைப்படத்தில் இஷா தல்வார், சயானி குப்தா, குமுத் மிஸ்ரா, மனோஜ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

கலங்க் (Kalank)

அலியா பட், சஞ்சய் தத், வருண் தவான், மாதுரி தீக்ஷித், சோனாக்ஷி சின்ஹா என நடிகர் பட்டாளமே நடித்திருக்கும்கலங்க்திரைப்படத்தில் 1945-ஆம் ஆண்டில் சுதந்திரத்துக்கு முன் நடக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள அழுத்தமான காதல் திரைப்படமாகும்.

அபிஷேக் வர்மன் இயக்கியுள்ள இத்திரைப்படம் வன்முறை மற்றும் பழிவாங்குதலால் இரத்தத்தில் ஹுஸ்னாபாத் மூழ்கும்போது ​​அன்பின் சாயலுக்காக அவர்கள் ஏங்குவதைப் பற்றின கதையாகும். பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீத்தம் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கபீர் சிங் (Kabir Singh)

தெலுங்குஅர்ஜூன் ரெட்டிபடத்தின் ஹிந்தி ரீமேக்கானகபீர் சிங்படம், வெளியான 4 வாரத்தில் 250 கோடி குவித்து வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கதுவித்தியாசமான காதல் கதையை மையமாக வைத்து இயக்குனர் சந்தீப் வாங்கா இயக்கிய இத்திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாஹித் கபூர், கீரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

அஸ்ட்ரோ பாலிஒன் எச்டி அலைவரிசை 251-இல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9 மணிக்கு புதிய திரைப்படம் ஒளியேறும்.