Home One Line P2 அஸ்ட்ரோ வானவில்லில் யாழி தொடர் நாடகம்!

அஸ்ட்ரோ வானவில்லில் யாழி தொடர் நாடகம்!

1001
0
SHARE
Ad

இவ்வாண்டு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில்  யாழிஎனும் புத்தம் புதிய தொடர் நாடகம் ஒளியேறுகின்றது5 அத்தியாயங்கள் கொண்ட இத்தொடர் நாடகத்தில் மலேசிய சினிமா கலையுலகில் பிரபல நடிகை கவிதா தியாகராஜன், வினோஷான், நிவாதரன் உட்பட பல முன்னணி கலைஞர்கள் நடித்துள்ளனர்.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் இத்தொடரில் கதாநாயகியின் தம்பி காணாமல் போய்விடுகிறார். சில வருடங்கள் கழித்து, அவர் மீண்டும் தன்னுடைய குடும்பத்தினரிடம் திரும்பி சேர்ந்து தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்கிறாரா இல்லையா என்பதுதான் கதையாகும்.

“‘ஆரம்பத்தில் இத்தொடரின் கதையைப் படிக்கும் ஒரு கடினமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க போகிறேன் என்ற எண்ணம் முதலில் தோற்றியது. முக்கிய கதாபாத்திரத்தில் மற்ற உள்ளூர் கலைஞர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வழங்கிய அஸ்ட்ரோவின் இந்திய நிகழ்ச்சிகளின் தயாரிப்பு குழுவினர்கள் நன்றியைத் தெரிவித்து கொள்றேன். வித்தியாசமான கதையுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இத்தொடர் நாடகத்தை மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்”, என்று கவிதா தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ரவிவர்மா விக்ரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள யாழி தொடர், அக்டோபர் 23-ஆம் தேதி தொடக்கம் அக்டோபர் 27-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இரவு 9 மணிக்கு அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் அஸ்ட்ரோ கோ செயலியில் ஒளியேறும். அதுமட்டுமின்றி, இத்தொடர் நாடகத்தை ஆன் டிமாண்ட் சேவையில் எங்கு இருந்தாலும் எப்பொழுது வேண்டுமின்றாலும் கண்டு மகிழலாம்.