Home One Line P2 பிரெக்சிட் திட்டம் மீண்டும் தோல்வி, காலக்கெடுவை நீட்டிக்க பரிந்துரை!

பிரெக்சிட் திட்டம் மீண்டும் தோல்வி, காலக்கெடுவை நீட்டிக்க பரிந்துரை!

705
0
SHARE
Ad

பிரிட்டன்: மீண்டும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிரெக்சிட் திட்டத்தினை நிறைவேற்றும் என்ணம் தோல்வியில் முடிந்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இத்திட்டம் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஐரோபிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஒப்புதல் அளித்த, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த செவ்வாய்கிழமை இது தொடர்பான வாக்கெடுப்பில், அதற்கு எதிராக வாக்களித்து பிரெக்ஸிட்டை முன்னெடுத்து செல்வதில் முட்டுக்கட்டையாக செயல்பட்டுள்ளனர்.

அக்டோபர் 31-ஆம் தேதி வரையிலும் பிரெக்சிட் ஒப்பந்தத்தினை நிறைவேற்ற காலக்கெடு உள்ளது. அதற்குள், பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு இருக்கும் இந்த காலக்கெடுவை நீட்டிக்க ஒன்றிய தலைவர்களுக்கு பரிந்துரைக்க இருப்பதாக ஐரோப்பியக் குழுவின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆயினும், இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டால், பிரதமர் போரிஸ் ஜாண்சன் தேர்தல் நடத்த முடிவெடுக்கக்கூடும் என்று பிரிட்டன் பிரதமர் அலுவலக வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.